NYATS – Charity and Relief Activities

NYATS – தொண்டு மற்றும் நிவாரண நடவடிக்கைகள்

நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம் என்பது நியூயார்க் மாநிலத்தின் தலைநகரான ஆல்பனியில் வசிக்கும் தமிழர்களால் 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற சமூக அமைப்பு. ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான NYATS, பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உதவி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. இத்தருணத்தில் எங்களின் இப்பணிதொடர, தாராளமாக நிதி மற்றும் ஆதரவு அளித்திடும் உறுப்பினர்கள், அபிமானிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் உளமார்ந்த நன்றி. 2020 ஆம் ஆண்டு தொடங்கி நாம் மேற்கொண்ட சில தொண்டு மற்றும் நிவாரணநடவடிக்கைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

NYATS - Charity and Relief Activities

The New York Albany Tamil Sangam is a community-run nonprofit organization founded in 2014 by Tamil speaking people living in Albany, the Capital of New York State. NYATS, as a non-profitable organization has involved itself in many local and overseas aid activities whenever possible. Thanks to all NYATS members, admirers and friends for their generous donations and support. Mentioned below are a few charity and relief activities carried out for the year 2020.

We hope to continue our efforts to lighten the load this virus has put on the backs of the less-fortunate families of the Capital Region, Tamil Nadu and other places across the globe. We hope to expand our services even through this strange and difficult time. Thank you for your ongoing support and we hope to hold more events in the future so please stay tuned for more updates.

தோல்பாவைக் கூத்து தொண்டு நிகழ்வு

தோல்பாவைக் கூத்து என்பது 400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த ஓர் நாட்டுப்புற நிழல் பொம்மலாட்டக் கலை. இந்த கலை நலிந்து வரும் நிலையில், ஆறாம் தலைமுறை தோல்பாவைக் கலைஞரான கலைமாமணி பி முத்துச்சந்திரன், இந்த பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். அவர்களின் “தோல்பாவைக் கூத்து” நிகழ்ச்சியை நம் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு தொண்டு நிகழ்ச்சியாக  NYATS பெருமையுடன் வழங்கியது. மேலும் அதன் வாயிலாக வரும் நன்கொடையை இந்த கலைஞர்களின் நலனுக்காக வழங்கி, இந்த பண்டைய கலையை நமது எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் உயரிய முயற்சியை மேற்கொண்டது.

Thol Paavai Koothu Charity event

Thol Paavai koothu is a 400-year-old tradition of shadow puppetry. This is a Tamil Folk art form which is struggling to survive. Kalaimaamani B Muthuchandran is a sixth generation Thol Paavai artist, who is doing his best to carry this tradition to the next generation. NYATS is proudly exhibited their “Thol Paavai Koothu” to our NYATS members and families as a charity event and encouraged our community members to donate for the welfare of these artists and help this ancient art to be preserved for our future generations.

Covid relief fund to Melam and Nadaswaram group

இந்த COVID தொற்று காலத்தில், தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த 35 மேளம் மற்றும் நாதஸ்வர கலைஞர்களின் குடும்பங்கள் வேலைவாய்ப்பு இல்லாததால் வாழ்வாதாரத்தை இழந்தனர் என்பது எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. எனவே அவர்களுக்குத் தேவையான நிவாரண நிதியினை வழங்கி உதவினோம்.

It was brought to our notice that close to 35 families of the Melam and Nadaswaram artists from the Vaththalakundu, Dindigul district, Tamil Nadu lost their livelihood due to lack of jobs during the pandemic situation. We provided relief funds to help them.

Donation to Comagan Music School

         Comagan is a music school run by a visually challenged team. It was brought to our attention that they are in need of a financial help to conduct a fundraiser event. NYATS team helped them by contributing a part of their expense. https://www.comaganmusicschool.com/

Donation to Aim for Seva

         AIM For Seva is a service organization in India, founded by Swami Dayananda Saraswati in the year 2000 with a primary focus of making education and healthcare accessible to children in rural areas. It is a non-governmental organization in special consultative status with the United Nations Economic and Social Council. https://aimforsevabayarea.org/

NYATS charity team has made it a priority to support them every year with a reasonable donation. NYATS feels proud to be a part of the Aim for Seva organization.

Donation to Equinox - a nonprofit community organization in the Capital Region

Donation to Equinox – a nonprofit community organization in the Capital Region​. NYATS  committee has donated to Equinox charity activities as part of our contribution to local community.

கேபிடல் சிட்டி ரெஸ்க்யூ மிஷன், ஆல்பனி , நியூயார்க் – பள்ளி நன்கொடை வழங்குதல்

கேபிடல் சிட்டி ரெஸ்க்யூமிஷன் என்ற தொண்டு நிறுவனம் ஆல்பனி மற்றும் அதன் சுற்றியுள்ள சமூகத்தில் வீடற்ற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது. கடந்த 4 ஆண்டுகளாக NYATS, பள்ளி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் பணிக்கு ஆதரவளித்துவருகிறது. அதேபோல், இந்த ஆண்டும் நமது சேவை நோக்கம் கொண்ட NYATS தொண்டு குழு மற்றும் தன்னார்வலர்கள் தொற்று சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் கூட கேபிடல் சிட்டி ரெஸ்க்யூமிஷனுக்கு பள்ளி மாணவர்களுக்கான உபகரணங்களை வாங்கி வழங்கினர்.

School supplies donation to the Capital City Rescue Mission - Albany, New York

  The Capital City Rescue Mission caters to the needs of the homeless community in and around Albany. For the last four years NYATS has been supporting their mission by giving them school supplies during the beginning of the school year. Likewise, this year our philanthropic NYATS charity team and volunteers purchased and delivered school supplies to the Capital City Rescue Mission even amidst this bizarre pandemic situation. This is as part of our contribution to local community.

அமெரிக்காவில் படிக்கும் இந்தியக் கல்லூரி மாணவர்களுக்கு COVID நிவாரணப் பொருட்கள்

ஆந்திராவிலிருந்து அமெரிக்காவில் படிக்க வந்த 10 மாணவர்கள் கோவிட் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. . அவர்களுக்கு அறிமுகமில்லாத இடத்தில் பொது போக்குவரத்தும் திடீரென நிறுத்தப்பட்ட காரணத்தால் உணவுபொருட்கள் இல்லாமல்அ வதிப்பட்டனர். NYATS தன்னார்வலர்கள், 2 வாரங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கி, நியூயார்க்கில் உள்ள நியூ பால்ட்ஸில் அவர்தம் இருப்பிடம் சென்று வழங்கியது.

COVID relief supplies to a group of Indian college students studying in America

As an effort to help the less-fortunate in Tamil Nadu during this pandemic, NYATS tied up with a charity organization called Udayan Care. This charity organization based in Chennai, India, is helping the poor during this tumultuous lockdown.

உதயன் கேர் , சென்னை, - நிவாரணநிதி

கோவிட் தொற்று காலத்தில், தமிழ்நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு உதவுவதற்கான முயற்சியாக, NYATS உதயன் கேர் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்தது. சென்னை – இந்தியாவை தளமாகக் கொண்ட இந்த தொண்டு அமைப்பு, கோவிட் ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட ஏழை தினக்கூலித் தொழிலாளர்களுக்கு உதவிவருகிறது.

Relief fund to Udayan Care, Chennai

As an effort to help the less-fortunate in Tamil Nadu during this pandemic, NYATS tied up with a charity organization called Udayan Care. This charity organization based in Chennai, India, is helping the poor during this tumultuous lockdown.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

More Articles

நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம் மற்றும் கற்பக விருட்சம் அறக்கட்டளை இணைந்து வழங்கிய கொரோனா நிவாரண உதவி – 2021

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் மேலவளவு கிராமத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு கற்பக விருட்சம் அறக்கட்டளை மற்றும் நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம் இணைந்து ₹15,000 மதிப்பில் அரிசி ...
Read More
/ Charity

NYATS Millet Maharani Recipes

சிறுதானியங்கள் பீட்சா வழங்கியவர் : வள்ளி இராகவன் தேவையான பொருட்கள்: ராகி மாவு - அரை கப் கம்பு மாவு - அரை கப் உப்பு - தேவையான அளவு பீட்சா சாஸ் - கால் கப் Mozzarella cheese - ...
Read More
/ Events

NYATS – General Awareness on Covid-19 Vaccine Availability

COVID-19 Vaccines Availability In The Capital Region NYATS - Awareness on Covid-19 Vaccination Availability and Vaccine Drive in the Capital district 1) NYS Covid-19 Vaccination Eligibility and Booking slots Please ...
Read More
/ Health

NYATS – Members List – 2021

First NameLast NameMembershipSpouse First NameSpouse Last NameSripathyVenkatramanFamilyNaliniSripathyEswarRamanathanFamilyPriyaBalasubramanianBalakarthikeyanNagarajanFamilyMahalakshmiNatarajanKrishna KumarSundaramFamilyBhuvaneswariMahalingamSRINIVASULUACHALUFamilyAMALARAVURISubash chandarSiruvanur balasundaramFamilyPrathibhaNagarajBalamuruganRamasubramanianFamilyNanthiniBalamuruganGaneshVaidyanathanFamilyJayashreeGaneshJanakiramanVasantharajaFamilyShylajaJPJothivenkatesanGovindanFamilyVijayaRathinamMohamedAzadFamilyZarinaJalalRagavanVellayappanFamilyValliammaiRagavanRavikumarMeyyanFamilyRenuSitharanjanSomaKrishnanFamilySanthalakshmiChinnaduraiSundarRamanFamilyShaliniSundarIlavarasuRadjunilamegameFamilyGayatryRajasekarrajavenkatasalukalkirajSingle  AnbukannanRajendranFamilyPoonguzhaliChezhianDiwakarParamasivamFamilyVijayalakshmiSeshachalamJayaprakashJayachandrababuFamilyRadhikaVaradarajaluKodiKothandanFamilyKousalyaConjiMohanKothandasamyFamilySenthuMohanrajPriyaKrishnakumarFamilyKrishnakumarSethumadhavanJanakiRamkumarSingle  jeevarathnamayyamperumalFamilyMahalakshmiAzhagiriswamyGowthamanKamarajFamilyVithyavallipriyaGowthamanYashhviLodhaEvent  PalanivelBalasubramaniamFamilySathiyaViswanathanSivakumaranAppanahFamilyThiruchelvi M. Nachiappan VinothkumarVelayuthamFamilyIlanagaiIlangovanVelanVenkataramanFamilyAnithaPattuPoongodiKarthikFamilyKarthikRajuSaravananLFamilyRamya SelvamAlagappanFamilySangeethaSelvamMahaRamasamyFamily  PRABUVARATHARAJUEvent  SivakumarChinnasamyFamilyKavithaRamasamysudhachandrasekarFamilyChandrasekarTheagarajanFnuGajendranFamilykavithagiridharanGayadriPrahalathanEvent  KannanNarasimhanFamilyRohiniKrishnanSubbuKrishnanFamilyLavanyaChandramouliMadhanNeelakandanFamilyPriyankaVijayakumarRameshkumarMalaichamyFamilyJothipriyaSivaprakasamSusheelaGanesanEvent   ...
Read More
/ NYATS Internal

NYATS – Quarantine Galatta

NYATS - Quarantine Galatta Series           இனிதே  தொடங்கிய 2020 ஆம்  வருடத்தில், புதுப்பொலிவுடன் செயல்படவிருந்த  குழு உறுப்பினர்களுக்கு சவாலாக காத்திருந்தது கொரோனா. அவரவர் வீட்டில் தனியே முடக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் கூடி மகிழ ஏங்கினோம் ...
Read More
/ Events

NYATS – Charity and Relief Activities

NYATS – தொண்டு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம் என்பது நியூயார்க் மாநிலத்தின் தலைநகரான ஆல்பனியில் வசிக்கும் தமிழர்களால் 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற சமூக அமைப்பு. ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ...
Read More
/ Charity